வியாபாரிகளின் எதிர்ப்பால் சாக்கடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்


வியாபாரிகளின் எதிர்ப்பால் சாக்கடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்
x

வியாபாரிகளின் எதிர்ப்பால் சாக்கடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்

திருப்பூர்

தாராபுரம்

தாராபுரம் நகராட்சி பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த 5 நாட்களாக நடைபெறுகிறது. நேற்று முன்தினம் விடுமுறையை அடுத்து பணிகள் நிறுத்தப்பட்டது. மீண்டும் நேற்று பூக்கடை கார்னரில் இருந்து பொள்ளாச்சி ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.அப்போதுபொள்ளாச்சி ரோட்டில் சாக்கடை ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சாலை துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் போது புதிய சாக்கடை பணிகள் தொடரலாம், அதுவரை தற்போது உள்ள சாக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என தெரிவித்து வர்த்தக கழக தலைவர் ஞானசேகரன் மற்றும் வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் கூடி நெடுஞ்சாலை உதவி பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்துதகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோரிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதால் அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள சாக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நிறுத்திவிட்டு மற்ற இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story