குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள்
குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள்
திருப்பூர்
வீரபாண்டி
திருப்பூர் காங்கேயம் சாலை 48-வது வார்டு கணபதிபாளையம் வழி, செவந்தாபாளையம் செல்லும் சாலையில், பல பகுதிகளில் குப்பை கழிவுகள் சாலையோரம் கட்டப்பட்டு வந்ததால் அவ்வளவு செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசி வந்தது. மேலும் இதுகுறித்து குப்பைக் கழிவிலிருந்து துர்நாற்றம் வீசி வருவதாக ' தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து 48-வது வார்டு பகுதி முழுவதும் சாக்கடை கழிவுகள் மற்றும் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அப்புறப்படுத்தும் பணி ஈடுபட்டனர். கழிவுகள் தேக்கம் அடைந்த பகுதியில் கிருமி நாசினையும் தெளிக்கப்பட்டது. மேலும் குப்பைகளை கொட்டாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி கவுன்சிலர் விஜயலட்சுமி கோபாலசாமி தெரிவித்தார்.
Related Tags :
Next Story