பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற மேயர் உத்தரவு


பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற மேயர் உத்தரவு
x

பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற மேயர் உத்தரவு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாநகர பகுதியில் பல இடங்களில் பழுதடைந்த மின்கம்பங்கள் உள்ளன. மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மிகவும் மோசமான மின்கம்பங்களை மாற்றியமைக்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நேற்று திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில், ஆணையாளர் கிராந்திகுமார் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். மாநகரில் மிகவும் பழுதடைந்த, சரிந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக மாற்றிக்கொடுக்க வேண்டும், தாழ்வான நிலையில் செல்லும் மின்கம்பிகளை மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தினார்.

----


Related Tags :
Next Story