உப்பாறு ஓடையில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றம்
உப்பாறு ஓடையில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றம்
குடிமங்கலம்
குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறுசெல்கிறது. உப்பாறு ஓடடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர்நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.உப்பாறு ஓடை தூர்வாரப்படாததால் பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக புதர்மண்டி கிடக்கிறது. மேலும் பல இடங்களில் அந்தந்த பகுதியில் உள்ள கழிவுகள், குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது.இதனால் உப்பாறு ஓடை மாசடைந்து வருகிறது என தினத்தந்தியில் செய்தி வெளியானது இதனைத் தொடர்ந்து நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் பெதப்பம்பட்டி அருகே உப்பாறு ஓடையில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டது.