மழைநீர் ஓடையை தூர்வார வேண்டும்


மழைநீர் ஓடையை தூர்வார வேண்டும்
x

மழைநீர் ஓடையை தூர்வார வேண்டும்

திருப்பூர்

காங்கயம்

காங்கயம், பழையகோட்டை சாலையில் உள்ள நீரோடை கரூர் சாலையில் உள்ள அகிலாண்டபுரம் குளம் வரை சென்றடைகிறது. காங்கயம் நகராட்சியில் உள்ள திருப்பூர் ரோடு, சின்னாயிபுதூர், திரு.வி.க நகர், படேல் வீதி, பாரதியார் வீதி, திருவள்ளுவர் வீதி, ஏ.சி நகர், சென்னிமலை ரோடு, மூர்த்திரெட்டி பாளையம், தீரன் நகர், குறிஞ்சி நகர், பொதிகை நகர், அய்யாசாமி நகர் காலனி, ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் இந்த வழியாக சென்றடைகிறது.

இந்த நீரோடையானது பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கயம் நகரம் உருவானபோதே மழை நீர் வடிகாலுக்காக பயன்பட்டுவருகிறது. காங்கயம் நகர விரிவாக்கத்தின் போது இந்த ஒடையானது கழிவு நீர் ஓடையாக மாறி மழை காலங்களில் மழைநீரும், மற்ற காலங்களில் கழிவு நீரும் சென்று வருகின்றது. இந்த ஓடையில் கனமழை பெய்யும் நேரங்களில் அதிக அளவிலான மழை நீரும் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்தநிலையில் ஓடையில் ஆக்கிரமித்துள்ள செடி கொடிகளால் சில இடங்களில் மழை நீர் சீராக செல்ல தடை ஏற்படுகிறது. இதனால் ஓடை உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள விவசாய நிலம், குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சூழ் நிலை உள்ளதால் செடி கொடிகளை அப்பறப்படுத்தி ஓடையை தூர்வார வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story