ஓடையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?


ஓடையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?
x

ஓடையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் கருவம்பாளையம் தெற்கு தோட்டம் வீதியில் குடியிருப்பை ஓட்டி அமைந்துள்ள ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் ஓடையில் கழிவுநீா் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி பொதுமக்களிடையே நோய் பரவும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் வெயில் காலம் என்பதால் விஷஜந்துகள் நிழல் தேடி ஓடையில் உள்ள செடிகளில் தங்குகிறது. இவை இரை தேடி அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் செல்கிறது. இந்த தெற்கு தோட்டம் பகுதியில் ஓடையை தாண்டி குடியிருப்புகளுக்கு செல்ல பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை மிகவும் சேதமடைந்தும், பாலத்தில் தடுப்புகள் இல்லாமல் இருப்பதால் வாகனங்கள் சாலையை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் ஓடையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்றி, பாலங்களை சீரமைத்து அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இப்பகுதி மக்கள் பாலத்திலும், ஓடையிலும் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.Next Story