ஆன்லைன் மூலம் மின் உரிமங்கள், சான்றிதழ்களை புதுப்பித்து வழங்க வேண்டும்


ஆன்லைன் மூலம் மின் உரிமங்கள், சான்றிதழ்களை புதுப்பித்து வழங்க வேண்டும்
x

ஆன்லைன் மூலம் மின் உரிமங்கள், சான்றிதழ்களை புதுப்பித்து வழங்க வேண்டும் என மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

ஆன்லைன் மூலம் மின் உரிமங்கள், சான்றிதழ்களை புதுப்பித்து வழங்க வேண்டும் என மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்அமைப்பாளர்கள் மத்திய சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு சங்கத்தின் மயிலாடுதுறை கிளை தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். கொள்ளிடம் கிளை செயலாளர் இக்பால், கொல்லுமாங்குடி கிளை செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் கணேசன் வரவேற்றார்.

மாநில தலைவர் ஜெயபால் சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தன், கொள்கை பரப்பு செயலாளர் நாகேஸ்வரன் ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மின் இணைப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறுகடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் 3 வீடுகளுக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க மறுக்கப்படுகிறது, பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு கட்டிட விதிகள் 2019-ல் திருத்தம் செய்து நிபந்தனையின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் மின் உரிமங்கள் மற்றும் சான்றிதழ்களை புதுப்பித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க மாநில பொருளாளர் அப்துல்சத்தார், மாவட்ட தலைவர் ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கண்ணதாசன் நன்றி கூறினார்.

----



Next Story