சீரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் திறப்பு
சாத்தான்குளத்தில் சீரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டில் மகளிர் சுகாதார வளாகம் பழுதடைந்து காணப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அந்த சுகாதாரவளாகம் சீரமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான ஜோசப் தலைமை தாங்கினார். 5-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜான்சிராணி மகளிர் சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். இதில் தி.மு.க. நகர துணை செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story