நேரு பூங்காவில் நடைபாதைகளை புதுப்பிக்கும் பணி
நேரு பூங்காவில் நடைபாதைகளை புதுப்பிக்கும் பணி
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழாவின் முதல் நிகழ்ச்சியாக வருகிற 6, 7-ந் தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காய்கறிகளால் ஆன பிரமாண்ட சிற்பங்கள், பறவைகள், வனவிலங்குகளின் உருவங்கள் அமைக்கப்படுகிறது. மேலும் பொழுதுபோக்கு, கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது.
இதற்கிடையில் பூங்காவில் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டது. தொடர்ந்து செயற்கை நீரூற்று அமைக்கும் பணி, சுற்றுச்சுவர் கட்டும் பணி, கழிப்பிடம் கட்டும் பணி நடைபெற்றது. மேலும் சிறுவர் விளையாட்டு பூங்காவில் புதிய உபகரணங்கள் பொருத்தப்பட்டது. பின்னர் 30 ஆயிரம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி நடைபெற்றது. அந்த செடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கி உள்ளது.
தற்போது பழுதடைந்த நடைபாதைகளை பராமரித்து புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து பூங்காவில் வர்ணம் பூசும் பணி நடைபெற உள்ளது. பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா புதுப்பொலிவுடன் காணப்படுவதால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.