ரூ.1 கோடியே 40 லட்சத்தில் காமாட்சி அம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி


ரூ.1 கோடியே 40 லட்சத்தில் காமாட்சி அம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி
x

திருப்பத்தூரில் ரூ.1 கோடியே 40 லட்சத்தில் காமாட்சி அம்மன் கோவில் புதுப்பிக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் டவுன் காளியம்மன் கோவில் தெருவில் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் கோவில் உள்ளது

இந்தக் கோவிலை புதுப்பிக்க வேண்டுமென கோவில் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் திருப்பத்தூர் நகர பொன், வெள்ளி நகை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் மகா மண்டபம் மற்றும் கோவில் புதுப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் பூஜை செய்து அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சி.நித்யா தலைமை தாங்கினார். ஆய்வாளர்கள் ம.திலகர், ஜே.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பி.சி‌.எம்.பாபு வரவேற்றார்,

பூஜை செய்து மகா மண்டபம் மற்றும் புதுப்பிக்கும் பணியை ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார்.


Next Story