சுய உதவிக்குழு கட்டிடம் சீரமைக்கப்படுமா?


சுய உதவிக்குழு கட்டிடம் சீரமைக்கப்படுமா?
x

திருமக்கோட்டையில் சுய உதவிக்குழு கட்டிடம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

திருமக்கோட்டை;

திருமக்கோட்டை அருகே உள்ள வடக்கு தென்பரை கிராமத்தில் சுய உதவிக்குழு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து காரைகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் சுய உதவிக்குழு பெண்கள் கூட்டம் நடத்தவும் அலுவலக வேலை செய்யவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சுயஉதவிக்குழு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story