மாந்தீஸ்வரர் கோவிலில் பாலாலயம்


மாந்தீஸ்வரர் கோவிலில் பாலாலயம்
x

மாந்தீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

திருப்பூர்

வி, மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகில் மாந்தபுரத்தில் மாந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ேகாவில் ஆயிரம் ஆண்டு பழமையானது. இந்த கோவிலில் மாந்தீஸ்வரர், விநாயகர், நந்தியம்பெருமாள், நாகதேவதை ஆகிய தெய்வங்கள் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலுக்கு அரசு அனுமதியுடன் திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நேற்று காலை மாந்தீஸ்வரர், விநாயகர், நந்திய பெருமாள், நாக தேவதை ஆகிய தெய்வங்களுக்கு பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு சாமி சிலைகளை அகற்றி வேறு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், இந்து சமய அறநிலை துறையினர், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



Next Story