குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்: பெரியகுளம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்


குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்:  பெரியகுளம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தேனி

பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் புனிதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். அப்போது நகராட்சியின் முக்கிய சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் பாதிப்படைகின்றனர். தென்கரை பள்ளிவாசல் தெரு முதல் மூன்றாந்தல் இணைப்பு பகுதியான தெற்கு தெரு வரை குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். மும்முனை சந்திப்பான வீரகாளியம்மன் கோவில் அருகே உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். இதையடுத்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் கூறினார்.


Related Tags :
Next Story