குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி


குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி
x

அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைப்பாற்காக குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைப்பாற்காக குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு செய்தார்.

சிமெண்டு சாலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி தேரோடும் மாடவீதியில் சிமெண்டு சாலை அமைக்கப்படும் என்று சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. சார்பில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் எ.வ.வேலுவும் வாக்குறுதி அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து தற்போது அருணாசலேஸ்வரர் கோவில் சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக பே கோபுரத் தெரு, பெரிய தெருவில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதியில் பக்க கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக அந்த பகுதியில் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிதாக இரும்பு குடிநீர் குழாய்கள் அமைக்கும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அமைச்சர் ஆய்வு

அந்த பணிகளை இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் துறை அதிகாரிகளிடம் குடிநீர் குழாய்கள் எவ்வளவு ஆழத்தில் அமைக்கப்படுகிறது.

குடிநீர் குழாய்கள் செல்லும் வழித்தடங்கள், அடுத்த கட்ட பணிகள் என்னவென்று விரிவாக கேட்டறிந்தார்.

ஆய்வின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், நகராட்சி பொறியாளர் நீலேஸ்வர், முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கார்த்திவேல்மாறன், அருணை கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் துரை. வெங்கட் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story