குறைந்த அழுத்த மின்சாரத்தால் மின்சாதன பொருட்கள் பழுது


குறைந்த அழுத்த மின்சாரத்தால் மின்சாதன பொருட்கள் பழுது
x

குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதடைந்ததால் பொதுமக்கள் அவதிப்பட நேர்ந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதடைந்ததால் பொதுமக்கள் அவதிப்பட நேர்ந்தது.

கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் மின்தடை ஏற்பட்டால் மக்கள் தவிக்கும் நிலை உருவாகிறது.

இந்த நிலையில் வந்தவாசி கேசவ நகர் பகுதியில் புதன்கிழமை அதிகாலை குறைந்த அழுத்த மின்வினியோகமாக மாறியது. மேலும் சில நிமிடங்களுக்கு ஒருமுறை மின்விநியோகம் சீராவதும், குறைந்த அழுத்த மின்சாரமாக மாறுவதும் தொடர்ந்தது.

இதனால் ஏ.சி., பிரிட்ஜ் போன்ற குளிர்சாதன பொருட்கள் இயங்குவது தடைபட்டது. பல வீடுகளில் உள்ள மின் சாதனங்கள் பழுதடைந்தது. இதனைத் தொடர்ந்து விடியற்காலை 5-30 மணிக்கு அந்த பகுதியில் மின்வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

பின்னர் மின் குறைபாடு சரி செய்யப்பட்டு காலை 9.30 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக அதிகாலை எழுந்து தேர்வுக்கு தாயராக இருந்த மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.



Next Story