வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவதை தடுக்க கசிவுநீர் குட்டைகள் சீரமைப்பு


வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவதை தடுக்க கசிவுநீர் குட்டைகள் சீரமைப்பு
x

ஏலகிரி மலை அடிவாரத்தில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் வனப்பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டைகளை வனத்துறையினர் சீரமைத்து வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஏலகிரி மலை அடிவாரத்தில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் வனப்பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டைகளை வனத்துறையினர் சீரமைத்து வருகின்றனர்.

தண்ணீர் தேடிவரும் வனவிலங்குகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஏலகிரி மலையில் உயர்ரக மரங்கள், மூலிகைச்செடி, கொடிகள் போன்றவை அடர்ந்து காணப்படுவதால் இங்கு மான், கரடி, குரங்கு, முயல், மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இதனால் வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்க்க வனத்துறையினர் ஆங்காங்கே தொட்டிகள் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனாலும் கோடை காலத்தில் வனவிலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் மான், கரடி, முயல், குரங்கு உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி கிராம பகுதிக்குள் வருகின்றன. இதனால் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்பட்டும், நிலப்பகுதிக்குள் வரும்போதும் விவசாயக் கிணறுகளில் தவறி விழுந்தும் பலியாகின்றன. மேலும் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன.

கசிவுநீர் குட்டைகள் சீரமைப்பு

இதனால் வனவிலங்குகளை பாதுகாக்கவும், மழையடிவாரங்களில் பொதுமக்களின் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமாவதை தடுக்கவும் மலையடிவாரங்களில் பழுதடைந்து உள்ள கசிவு நீர் குட்டைகளை தூர்வாரி, அதில் தண்ணீர் தேக்கி வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சிக்குட்பட்ட ஏலகிரி மலை அடிவாரத்தில் பழுது அடைந்துள்ள தடுப்பு அணைகள் மற்றும் கசிவு நீர் குட்டைகளை சீரமைக்கும் பணி நடைபெற்றது.


Next Story