சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்


சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்
x

பொதக்குடியில் சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

பொதக்குடியில் சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

நூலகம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில் நூலகம் உள்ளது. இந்த நூலக கட்டிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த நூலகத்தில் வரலாற்று நூல்கள், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் தினசரி நாளிதழ்கள் வைக்கப்பட்டு உள்ளன. இங்கு தினமும் மாணவர்கள், பொதுமக்கள் வந்து புத்தகங்களை படித்து பயன்பெற்று வருகின்றனர்.

கட்டிடம் சேதம்

இந்த நிலையில் இந்த நூலக கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக, கட்டிடத்தின் மேற்கூரையில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது.

இதனால், மழைநீர் கட்டிடத்திற்குள் கசிவதால் புத்தகங்கள் சேதம் அடையும் நிலை உள்ளது. நூலக கட்டிடம் சேதம் அடைந்துள்ளதால் வாசகர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

சீரமைக்க வேண்டும்

மேலும், கட்டிடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் கட்டிடம் மேலும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போட்டி தேர்வு

இதுகுறித்து கல்லூரி மாணவர் முகமது ரியாஸ் கூறுகையில் பொதக்குடியில் உள்ள நூலக கட்டிடம் பழமையானது. இந்த நூலகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதைபயன்படுத்தி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் புத்தகங்களை படித்து போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மழைநீர் கசிந்து புத்தகங்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது அதனை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றனர்.

வாசகர்கள் அச்சம்

பொதக்குடி ஹபீப் முகமது கூறுகையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்அடையும் வகையில் ஏராளமான புத்தகங்கள் இங்கு உள்ளன. நூலக கட்டிடம் சேதமடைந்துள்ளதால் ஒருவித அச்சத்துடனே வாசகர்கள் வந்து செல்கின்றனர்.

தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுவர்களின் ஈரத்தன்மை ஏற்பட்டு இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது. இந்த சேதமடைந்த நூலக கட்டிடத்தை அகற்றி விட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றனர்.


Next Story