கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் டைல்ஸ் கற்கள் பெயர்ந்த இடத்தில் சீரமைப்பு பணி
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் டைல்ஸ் கற்கள் பெயர்ந்த இடத்தில் சீரமைப்பு பணி நடந்தது.
திருவண்ணாமலை
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் டைல்ஸ் கற்கள் பெயர்ந்த இடத்தில் சீரமைப்பு பணி நடந்தது.
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் முதல் தளத்தில் ஏற்பட்ட அதிர்வில் தரையில் பதிந்திருந்த டைல்ஸ்கள் பெயர்ந்தன. இதனால் 2 தளங்களிலும் பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில் நேற்று காலை பொதுப்பணித்துறையினர் அலுவலகத்திற்கு வந்தனர். முதல் தளத்தில் டைல்ஸ்கள் பெயர்ந்திருந்த பகுதிக்குச் சென்ற அவர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து டைல்ஸ் கற்கள் பெயர்ந்திருந்த பகுதியில் பொதுப்பணித்துறை மூலமாக புதிய டைல்ஸ்கள் பதிக்கும் வகையில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story