ஓசூர் கெலவரப்பள்ளி அணை மதகுகள் புனரமைக்கும் பணி கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்


ஓசூர் கெலவரப்பள்ளி அணை மதகுகள் புனரமைக்கும் பணி கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Jun 2023 1:15 AM IST (Updated: 25 Jun 2023 10:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் கெலவரப்பள்ளி அணை மதகுகள் புனரமைக்கும் பணியை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.

புனரமைக்கும் பணி

ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் மதகுகள் புனரமைக்கும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். மேலும் அணையில் இருந்து உபரிநீரையும் கலெக்டர் திறந்து வைத்தார்.

பின்னர், கலெக்டர் சரயு கூறியதாவது:-

கெலவரப்பள்ளி அணை பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பில் உபரிநீர் வழிந்தோடி கதவுகள், மணல் போக்கி கதவு, கால்வாய் கதவுகள் ஆகியவற்றை மாற்றியமைக்கும் பணிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது பணிகள் மேற்கொள்ள அணையில் இருந்து, அணையின் நீர்மட்டத்தை 44-28 அடியில் இருந்து 24 அடியாக குறைப்பதற்குஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளில்...

அதனைத் தொடர்ந்து தண்ணீர் உபரிநீர் வழிந்தோடி வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் உபரிநீர் மதகுகளின் எண்ணிக்கை 7 மற்றும் 1 மணல்போக்கி கதவு, வலது மற்றும் இடது புற கால்வாய் கதவுகள் 2 ஆகியவை புனரமைக்கும் பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ மற்றும் மேயர் எஸ்.ஏ.சத்யா, உதவி கலெக்டர் சரண்யா, நீர்வளத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story