ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: மக்கள் நீதி மய்யம் கண்டனம்
வங்கிகளில் மாதத் தவணைத் தொகை செலுத்த முடியாமல் பரிதவிப்போரின் நிலையைக் கருத்தில்கொண்டு, வட்டி உயர்வைக் கைவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் வீடு, வாகனம், தனி நபர் கடன்களுக்கான வட்டி அதிகரித்து மக்கள் சிரமத்துக்கு உள்ளாவார்கள். தொடர்ந்து 4-வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பொருளாதார மந்த நிலையில், ஏழை, நடுத்தர மக்கள் மீதான சுமையை அதிகரித்துக் கொண்டே செல்வது நியாயமற்றது. மக்களை வதைக்கும் இந்த நடவடிக்கையை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது. வங்கிகளில் மாதத் தவணைத் தொகை செலுத்த முடியாமல் பரிதவிப்போரின் நிலையைக் கருத்தில்கொண்டு, வட்டி உயர்வைக் கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story