சட்ட அலுவலர்களுக்கு அறிக்கை ஆவணங்களை விரைந்து வழங்க வேண்டும்


சட்ட அலுவலர்களுக்கு அறிக்கை ஆவணங்களை விரைந்து வழங்க வேண்டும்
x

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க சட்ட அலுவலர்களுக்கு அறிக்கை, ஆவணங்களை விரைந்து வழங்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்

விழுப்புரம்

விழுப்புரம்

கலந்தாலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சார்நிலை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அரசு சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை உடனுக்குடன் முடிவுக்கு கொண்டு வருவது குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

அறிவுரை

மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), விழுப்புரம் மாவட்ட அளவிலான நீதிமன்ற வழக்குகளின் நோடல் அலுவலராக பணியாற்றுமாறும், மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய் மற்றும் வளர்ச்சி பிரிவு அலுவலர்களின் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள் ஆகியவற்றை தயார் செய்து சட்ட அலுவலர்களுக்கு அளித்திட வேண்டும். மாவட்ட அளவிலான வழக்குகள் தொடர்பான பிரச்சினைகளை மாவட்ட கலெக்டரான எனது கவனத்திற்கு சட்ட அலுவலர்கள் கொண்டு வருமாறும், இதுதொடர்பாக எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் வருவாய் மற்றும் வளர்ச்சி பிரிவில் உள்ள அலுவலர்கள் மற்றும் அனைத்து சட்ட அலுவலர்களை உள்ளடக்கிய வாட்ஸ்-அப் குழுவை ஏற்படுத்தி அதில் வழக்குகள் தொடர்பான தகவல்களை பரிமாற்றம் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த அறிக்கை, ஆவணங்களை விரைந்து சட்ட அலுவலர்களுக்கு வழங்கி தேவையான ஒத்துழைப்பு அளிக்குமாறு அனைத்து அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித் மற்றும் அரசு வக்கீல்கள், கூடுதல் அரசு வக்கீல்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story