தருமபுரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அரசு அலுவலகங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேசிய கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஒன்றிய குழு தலைவர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கநாதன், ஒன்றிய குழு துணைத் தலைவர் அற்புதம் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவுக்கு பேரூராட்சி தலைவர் பிருந்தா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கோமதி தேசிய கொடி ஏற்றினார். இதில் பேரூராட்சி துணைத் தலைவர் மல்லிகா ராஜி, முன்னாள் கவுன்சிலர் சண்முகம், கவுன்சிலர்கள் விஜய் ஆனந்த், தமிழ்ச்செல்வி, தர்மலிங்கம், ஜபியுல்லா, எழுத்தர் லதா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மகாத்மா காந்தி, பாரத மாதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
போலீஸ் நிலையம்
மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா தேசிய கொடி ஏற்றி வைத்து, குடியரசு தின விழா குறித்து பேசினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாசம், முருகன், ஜெயக்குமார், சின்னசாமி, ஞானப்பிரகாசம் மற்றும் போலீசார் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரை கனி தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து மகாத்மா காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா, கவுன்சிலர்கள் சத்யா, ரீனா, லட்சுமி, கீதா, அபிராமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளிகள்
பாலக்கோடு தெற்கு ஊராட்சி ஒன்றிய அண்ணா தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கிராம கல்வி குழு தலைவர் பி.எல்.ஆர்.ரவி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை-ஆசிரியர் பால சண்முகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுதந்திரத்துக்காக போராடிய வீரர்கள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அலமேலு, கூட்டுறவு சங்க தலைவர் ராஜ கணேசன், வார்டு உறுப்பினர்கள் சரவணன், ஜெயந்தி, மோகன், ராஜசேகரன், ஒன்றிய தி.மு.க. பிரதிநிதி பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு அருகே காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் காட்டம்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் முத்தப்பன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து சுதந்திரத்துக்காக போராடிய வீரர்கள் குறித்த பேச்சுப்போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மேலும் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் ஊர் கவுண்டர் சின்னசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் பெஞ்சமின், உதவி ஆசியர்கள் செல்வநாதன், ராஜா, இளம்பரிதி, தயாளன், ஷீபா மேரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காரிமங்கலம், பொ.மல்லாபுரம்
காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழாவையொட்டி செயல் அலுவலர் ஆயிஷா தேசிய கொடி ஏற்றினார். இதில் வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி, கிருஷ்ணன் ஆகியோர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். இதில் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். காரிமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தார் ஞானபாரதி தேசிய கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை-ஆசிரியர் பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் முன்னாள் ராணுவ வீரர் ஆறுமுகம், ஆசிரியர்கள் சேகர், தமிழ்தென்றல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லூரியில் குடியரசு தின விழாவையொட்டி கல்லூரி முதல்வர் அன்பரசி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் பேராசிரியர்கள் சித்திரைசெல்வி, ரமேஷ் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.