குடியரசு தின விழா
வேதாரண்யம் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா நடந்தது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நகர மன்ற தலைவர் புகழேந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணைத் தலைவர் மங்களநாயகி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், ஆய்வாளர் முருகானந்தம், நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு பாஸ்கர், மேலாளர் அண்ணாதுரை, ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கலந்து கொண்டனர். அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
Related Tags :
Next Story