காங்கிரஸ் சார்பில் குடியரசு தின விழா


காங்கிரஸ் சார்பில் குடியரசு தின விழா
x

நெல்லையில் காங்கிரஸ் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகம் முன்பு நடந்த விழாவுக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னாள் ராணுவ வீரருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார். காமராஜர், இந்திரா காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாநில வக்கீல்அணி இணை தலைவர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், கவிபாண்டியன், சொர்ணம், மாரியம்மாள், மாவட்ட துணை தலைவர்கள் வெள்ளைபாண்டியன், சிவன் பெருமாள், மாவட்ட பொதுச்செயலாளர் மகேந்திரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story