அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா


அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா நடந்தது.

தேனி

தேனி மாவட்டத்தில் கோர்ட்டுகள், அரசு அலுவலகங்களில், காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா தலைமை தாங்கினார். மாவட்ட குடும்ப நல கோர்ட்டு நீதிபதி ரவி தேசியகொடி ஏற்றினார். விழாவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன் மற்றும் நீதிபதிகள், மூத்த வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தேசியகொடி ஏற்றினார். இதில் போலீஸ் அதிகாரிகள், போலீசார், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரிதா தேசியகொடி ஏற்றினார். தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா தேசியகொடி ஏற்றினார்.


Related Tags :
Next Story