மயிலாடுதுறையில் குடியரசு தின விழா கொடியேற்றம் மற்றும் அணிவகுப்பு
மயிலாடுதுறையில் குடியரசு தின விழா கொடியேற்றம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் 74-வது குடியரசு தினவிழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா முன்னிலை வகித்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 178 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் காவல்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றிய 12 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story