ஊராட்சிகளில் குடியரசு தின கிராம சபை கூட்டம்


ஊராட்சிகளில் குடியரசு தின கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T15:24:30+05:30)

மயிலாடுதுறை மாவட்ட ஊராட்சிகளில் குடியரசு தின கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) குடியரசு தின விழாவையொட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும். மேலும் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணிகள், குடிநீர் வசதி, வளர்ச்சிப் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட முக்கிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story