மாவட்ட கல்வி அலுவலகத்தை சிவகங்கைக்கு மாற்றக்கூடாது


மாவட்ட கல்வி அலுவலகத்தை சிவகங்கைக்கு மாற்றக்கூடாது
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் செயல்பட்டு வந்த மாவட்ட கல்வி அலுவலகத்தை சிவகங்கைக்கு மாற்றக்கூடாது என உதவி பெறும் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டையில் செயல்பட்டு வந்த மாவட்ட கல்வி அலுவலகத்தை சிவகங்கைக்கு மாற்றக்கூடாது என உதவி பெறும் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாவட்ட கல்வி அலுவலகம்

தேவகோட்டையை தலைமையிடமாக கொண்டு பல ஆண்டுகளாக மாவட்ட கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு ஏராளமான அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆகியவை இயங்கி வருகின்றன.

தற்போது மாவட்ட கல்வி அலுவலகம் நீக்கப்பட்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகமாக தேவகோட்டை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவகோட்டை, காரைக்குடி, உள்ளிட்ட உதவி பெறும் பள்ளிகள் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள மாவட்ட கல்வி அலுவலகம், சிவகங்கையில் உள்ளதால் நீண்ட தூரம் பயணம் செய்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான பணப்பலன்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படும்.

கோரிக்கை

மேலும், அலுவலக கோப்புகள் கொண்டு செல்ல தகுந்த பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலும் மாற்றம் செய்யப்பட்டுள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தை மறு பரிசீலனை செய்து மீண்டும் தேவகோட்டையிலேயே செயல்பட ஆவண செய்யுமாறு முதல்-அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளிகளின் அலுவலர் சங்கம் சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் பாண்டியராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.



Next Story