காரைக்குடி தமிழ்த்தாய் கோவிலை சீரமைக்க கோரிக்கை


காரைக்குடி தமிழ்த்தாய் கோவிலை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி தமிழ்த்தாய் கோவிலை சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடியில் உள்ள தமிழ்த்தாய் கோவிலில் அண்ணா தமிழ் கழகம் தமிழ்த்தாய் கலைக்கூடம் ஆகியவற்றின் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அண்ணா தமிழ் கழக நிறுவனர் தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். தமிழ்த்தாய் கலைக்கூட செயலாளர் அறிவுடை நம்பி முன்னிலை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ, காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. சுப துரைராஜ், தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிடமணி ஆகியோர் தமிழ்த்தாய் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் தமிழ் சான்றோர்கள், கம்பன் அறநிலை நிறுவனர் சுதந்திரப்போராட்ட வீரர் கம்பன் அடிப்பொடி சா.கணேசன் தமிழ்பற்றால் நிறுவப்பட்ட தமிழ் தாய் கோவில் கருணாநிதி 1975-ல் தமிழக முதல்-அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டு அவர் 1993-ல் தி.மு.க. தலைவராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது. வரலாற்றுச்சிறப்புமிக்க, மொழிக்கென உலகின் முதல்கோவிலாக திகழும் தமிழ்த்தாய் கோவிலை புதுப்பித்து சீரமைத்து தரவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றினர். அதற்கு மாங்குடி எம்.எல்.ஏ, நகர்மன்றத்தலைவர் முத்துத்துரை ஆகியோர் ஆவன செய்வதாக உறுதியளித்தனர்.


Next Story