சாலையில் சுற்றித்திரியும் கோவில் மாடுகளை அப்புறப்படுத்த கோரிக்கை


சாலையில் சுற்றித்திரியும் கோவில் மாடுகளை அப்புறப்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் சுற்றித்திரியும் கோவில் மாடுகளை அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் நகர் பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் கோவில் மாடுகளால் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பலர் காயம் அடைகின்றனர்.இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கோவில் மாடுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த கோரி போராட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருப்புவனத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் அய்யம்பாண்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணைத்தலைவர் முத்துராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் கண்ணன், ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் முத்திருளு, மக்கள் அதிகாரம் அமைப்பு மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகரில் திரியும் கோவில் மாடுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த கோரி பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிற 31-ந்தேதி மாலை சந்தை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


Next Story