தூத்துக்குடி-கோவை இடையே இரவுநேர தனி ரெயில் இயக்க கோரிக்கை
தூத்துக்குடி-கோவை இடையே இரவுநேர தனி ரெயில் இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி வர்த்தக தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தூத்துக்குடி-கோவை இடையே இரவுநேர தனி ரெயில் இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி வர்த்தக தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து சங்க துணை செயலாளர் தீரமகராஜன் சென்னை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி-கோவை
தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சிக்கு வருகிற 2-ந் தேதி முதல் இணைப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் வாஞ்சி மணியாச்சி சந்திப்புக்கு இரவு 11.30 மணிக்கு சென்றடைகிறது. இதனால் தூத்துக்குடி ரெயிலில் ஏறுவதற்கு சிரமமாக இருக்கும். அதே போன்ற மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து வரும் ரெயில் வாஞ்சி மணியாச்சி சந்திப்புக்கு அதிகாலை 2.40 மணிக்கு வந்து சேருகிறது. இதனால் தூத்துக்குடி இணைப்பு ரெயிலில் ஏறுவதற்கு பயணிகள் மிகுந்த சிரமப்படுவார்கள்.
தனி ரெயில்
ஆகையால் தூத்துக்குடி-கோவை-தூத்துக்குடி இணைப்பு ரெயிலை ஏற்கனவே இயக்கப்பட்ட நேரத்திலேயே, பெட்டிகளை கோவை ரெயிலுடன் இணைத்து இயக்க வேண்டும். அல்லது தூத்துக்குடி-கோவை இரவு நேர தனி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளின் சிரமத்தை கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.