புற நோயாளி சிகிச்சை பிரிவில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க கோரிக்கை


புற நோயாளி சிகிச்சை பிரிவில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க கோரிக்கை
x

புற நோயாளி சிகிச்சை பிரிவில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு இந்த ஆஸ்பத்திரிக்கு புறநோயாளி சிகிச்சை பிரிவுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் புற நோயாளி சிகிச்சை பிரிவில் போதுமான டாக்டர்கள் நியமிக்கப்படாத நிலையில் சிகிச்சைக்கு வருவோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக புகார் கூறப்படும் நிலையும் உள்ளது. இந்நிலையில் கூட்டம் அதிகரித்தால் சிகிச்சை பிரிவின் கதவு பூட்டப்பட்டு விடுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறும் நிலை உள்ளது. எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் புற நோயாளி சிகிச்சை பிரிவில் கூடுதல் டாக்டர்களை நியமித்து சிகிச்சைக்கு வரும் பொது மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story