நிரந்தர பணியிடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை


நிரந்தர பணியிடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை
x

நிரந்தர பணியிடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

மதுரை


தமிழ்நாடு சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக மாநிலம் முழுவதும் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிபந்தனை விதிக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் செயல்முறைகள் 16.11.2012-ன் படி, நிரந்தரப்பணியிடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருபவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, வளர் ஊதியம், ஊக்க ஊதியம். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பணி பதிவேடு தொடக்கம், பிரசவ விடுப்பு அனுமதிப்பு, தகுதிகாண் பருவம் நிறைவேற்றல், பணி வரன்முறை செய்தல் போன்ற வழக்கமான நடைமுறைகள் இது வரை செய்யப்படவில்லை. இவர்களில் சிலர் தற்போது பணி ஓய்வு பெற உள்ளனர். 2012-ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த சிலரும் 2019-ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்தவர்களும் சம்பளம் இல்லாமல் தற்போது வரை பணியாற்றி வருகின்றனர். எனவே, மனிதாபிமான அடிப்படையில் இவர்களுக்கான தகுதித்தேர்வு நிபந்தனையை ரத்து செய்து தகுதித் தேர்வு விலக்கு அரசாணை வெளியிட வேண்டும். இதனால் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளுக்காக அரசு செலவிட்டு வரும் வழக்கு செலவுத்தொகை மிச்சமாகும். எனவே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு ஆசிரியர்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story