புதிய ஆழ்குழாய் அமைக்க கோரிக்கை
மங்கலக்குடி ஊராட்சியில் புதிய ஆழ்குழாய் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ராமநாதபுரம்
தொண்டி
மாவட்ட கலெக்டர் மற்றும் நவாஸ் கனி எம்.பி. ஆகியோருக்கு மங்கலக்குடி ஊராட்சி தலைவர் அப்துல் ஹக்கீம் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருவாடானை தாலுகா மங்கலக்குடி ஊராட்சியில் சிறுபான்மையினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். ஊராட்சியில் அதிக மக்கள் தொகை உள்ளதால் இங்கு தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஊராட்சி பொதுமக்கள் குடிநீருக்காக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசின் சிறுபான்மை துறையின் மூலம் மங்கலக்குடி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் புதிதாக ஆழ்குழாய் அமைக்க உரிய அனுமதியும், நிதியையும் பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story