கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை
கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது
மயிலாடுதுறை
தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் முதல் மாநில மாநாடு மயிலாடுதுறையில் நடந்தது. மாநாட்டிற்கு மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் துரைராஜ் வரவேற்று பேசினார். விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு, மாநில பொதுச் செயலாளர் சண்முகம், மாவட்ட தலைவர் சிம்சன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கோவில் இடங்களை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு அந்த இடங்களை சொந்தமாக்கிட வேண்டும். அவர்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசே கிரயத்தொகையை செலுத்திட வேண்டும். கோவில் இடங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்துவரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.