விண்ணப்பங்களை முறையாக வினியோகம் செய்ய கோரிக்கை
மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களை முறையாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களை முறையாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் வினியோகம்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. மாவட்ட நிர்வாகம் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று இந்த விண்ணப்பத்தை வினியோகம் செய்வார்கள் என தெரிவித்திருந்தது.
ஆனால் பல பகுதிகளில் விண்ணப்பத்தை வினியோகம் செய்தவர்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு பயனாளிகளை அங்கு வரச்சொல்லி விண்ணப்பத்தை வினியோகம் செய்த நிலையில் பிரச்சினை ஏற்பட்டது.
நடவடிக்கை
மேலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர் வேலைக்கு சென்ற பிறகு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டதால் அவர்களுக்கு விண்ணப்பங்கள் கிடைக்காத நிலையும் ஏற்பட்டது.
எனவே மாவட்ட நிர்வாகம் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களை முறையாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேச மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பரத் ராஜா வலியுறுத்தி உள்ளார்.