மழைநீர் வடிகால் அமைக்க கோரிக்கை


மழைநீர் வடிகால் அமைக்க கோரிக்கை
x

மழைநீர் வடிகால் அமைக்க ேகாரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்


விருதுநகரில் காலையில் கோடை காலத்தை போல் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாலையில் தொடர்ந்து மழை பெய்யும் நிலை உள்ளது. விருதுநகர் பழைய பஸ் நிலையத்தை சுற்றி மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தந்த நிலையிலும் அது முறையாக செய்யப்படாததால் மழை பெய்தவுடன் பஸ் நிலையத்தை சுற்றி கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலை உள்ளது. இதனால் பஸ்களும், பயணிகளும் பஸ் நிலையத்திற்குள் செல்ல மிகுந்த அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளதை போல பஸ்நிலையத்தை சுற்றிலும் மழை நீர் உரிய முறையில் வடிந்து செல்ல மழைநீர் வடிகால் அமைப்பை முறையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story