சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியை சீரமைக்க கோரிக்கை
விருதுநகர் அருகே மலைப்பட்டியில் சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் அருகே மலைப்பட்டியில் சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர் தேக்கத்தொட்டி
விருதுநகர் அருகே மலைப்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊரின் மையத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகே உள்ள தெப்பத்தின் வடக்கு பகுதி சுற்றுச்சுவர் சேதமடைந்து விழுந்துள்ள நிலையில் தற்போது மேற்கு பகுதி சுற்றுச்சுவரும் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது.
யூனியன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் சேதமடைந்த பழைய கட்டிடங்கள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. ஊரின் தொடக்கத்தில் உள்ள சேதமடைந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்படாமல் உள்ளதால் அந்த பகுதிக்கு செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
பயணிகள் நிழற்குடை
துணை சுகாதார நிலையம் அருகே உள்ள ஊருணியை பயன்படுத்த முடியாதபடி கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது.
எனவே இந்த பகுதி மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றவும், ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியை விரைவாக சீரமைக்கவும், தெப்பத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி சுற்றுச்சுவர்களை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.