பண்ருட்டி தாலுகா அலுவலகத்திற்குவேப்பிலை மாலை அணிந்து வந்த இந்து மக்கள் கட்சியினர்சாகை வார்த்தலுக்கு அரிசி வழங்க கோரிக்கை
சாகை வார்த்தலுக்கு அரிசி வழங்க கோரிக்கை விடுத்து பண்ருட்டி தாலுகா அலுவலகத்திற்கு வேப்பிலை மாலை அணிந்து வந்த இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனா்.
பண்ருட்டி,
இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் தேவா தலைமையில் கட்சியினர் வேப்பிலை மாலை அணிந்து கஞ்சி கலயத்துடன் பண்ருட்டி தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் இவர்கள் ஆடி மாதம் அம்மன் கோவில்களில் நடைபெறும் சாகை வார்த்தல் விழாவுக்கு அரிசி, கம்பு, கேழ்வரகு ஆகிய தானியங்களை தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களுக்கு இலவசமாக அரசு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனுவை அங்கிருந்த துணை தாசில்தார் பாலமுருகனிடம் வழங்கினா். மனுவை பெற்றுக்கொண்ட அவர் இந்த கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. துணை தலைவர் செல்வகுமார், அமைப்பு பொதுச்செயலாளர் ஜம்புலிங்கம், இந்து திருக்கோவில் சொத்து பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் நாகராஜ், சித்தர் பேரவை மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.