வேலூர் கஸ்பாவில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை


வேலூர் கஸ்பாவில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை
x

வேலூர் கஸ்பாவில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

வேலூர் கஸ்பாவில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கஸ்பா 42, 43-வது வார்டுகளில் சில பகுதிகளில் 2 வாரங்களாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என்றும், இதுகுறித்து கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 42,43-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று காலை வீடுகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் முறையிடுவதற்காக வேலூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். கமிஷனர் பாதாள சாக்கடை பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் இருந்ததால் அவரை சந்திக்க காத்திருந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யாததால் மிகவும் சிரமமாக உள்ளது. குடிநீரை விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் மற்ற தேவைகளுக்கு ஏராளமான தண்ணீர் தேவைப்படும். அவற்றை விலை கொடுத்து வாங்க சிரமமாக உள்ளது. எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டாரை சரி செய்ய வேண்டும் என்று கவுன்சிலர், அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீடுகளுக்கு குடிநீர் வழங்கவும், மின்மோட்டாரை உடனடியாக பழுது பார்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story