சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை


சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
x

சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் பேர்நாயக்கர்பட்டியில் பெண்கள், மற்றும் ஆண்களுக்கு என கட்டப்பட்ட சுகாதார வளாகம் 1 வருடத்திற்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் திறந்தவெளியினை கழிப்பறையாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூடப்பட்டு கிடக்கும் சுகாதார வளாகத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story