இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பிணத்தை தூக்கிக்கொண்டு செல்லும் அவலம் தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
திருப்பத்தூர் அருகே பாம்பாற்றுக்குள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பிணத்தை தூக்கிக்கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே பாம்பாற்றுக்குள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பிணத்தை தூக்கிக்கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் தாலுக்கா காக்கனாம்பாளையம், கூடபட்டு ஊராட்சிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான சுடுகாடு கூடப்பட்டு பாம்பாற்றின் மறுகரையில் உள்ளது. தற்போது பெய்த தொடர்மழை காரணமாக பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இன்னமும் இடுப்பளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
நேற்று காக்கனாம்பாளையம் கிராமத்தை சார்ந்த ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை பாம்பாற்றில் இடுப்பளவு நீரில் இறங்கி சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ''பாம்பாற்றில் தண்ணீருக்குள் இறங்கித்தான் சுடுகாட்டுக்கு கொண்டு ெசன்று பிணத்தை புதைக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே பாம்பாற்றை கடக்க மேம்பாலம் அல்லது தரைப்பாலம் அமைத்துத் தரவேண்டும்'' என்றனர்.