பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை


பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை
x

பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தஞ்சாவூர்

பூதலூர் அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்திய‌ சுதந்திரத்திற்கு முன்பு தனியாரால் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நடைபெற்று வந்தது. பள்ளியிலேயே தங்கி படிக்கும் வசதியும், உணவு வசதியும் இருந்து வந்தது. காலப்போக்கில் அரசு உதவி பெறும் பள்ளியாக‌ மாற்றப்பட்டது. தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை மட்டுமே செயல்பட்டு வருகிறது.

புதிதாக கட்டப்படுமா?

இந்த பள்ளியில் 26 மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் இந்தப்பள்ளி தற்காலிகமாக கிராம சேவை மையத்தில் நடைபெற்று வருகிறது. கிராம சேவை கட்டிடம் புதுப்பிக்க பட உள்ளதால்‌ மாணவர்கள் தொடர்ந்து பாதுகாப்பான முறையில் கல்வியை தொடர‌ இயலாத நிலை ‌உள்ளது. பழைய கட்டிடம் உள்ள இடம் பெரியதாக இருப்பதால் அந்த கட்டிடத்தை முழுமையாக இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story