எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் கட்டிடத்தால்அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப அக்கறைகாட்டாத பெற்றோர்புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை


எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் கட்டிடத்தால்அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப அக்கறைகாட்டாத பெற்றோர்புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் கட்டிடம் உள்ளதால் அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அக்கறைகாட்டாமல் உள்ளனர். அவர்கள் புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர்


புதுப்பேட்டை,

பண்ருட்டி அருகே புதுப்பேட்டையில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கிறார்கள். இந்த கட்டிடம் கட்டி, வருடங்கள் பல உருண்டோடி விட்டது. கூடவே கட்டிடத்தை பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறிவிட்டார்கள். விளைவு, கட்டிடம் பல இடங்களில் சேதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குகிறது இந்த அங்கன்வாடி மையம். ஆனால், அந்த மையத்தின் கட்டிடத்துக்கு என்னவோ ஊட்டம் குறைந்தது போன்று ஆங்காங்கே விரிசல்களுடன் காட்சி தருவது வேதனைக்குறிய ஒன்றாகும்.

குழந்தைகளின் பாதுகாப்பு?

அதாவது, கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இருக்கிறது. கட்டிடத்துக்கு முன்பகுதியிலும் சிலாப் பகுதி எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. எனவே, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் இந்த கட்டிடத்தால், இங்கு வரும் சின்னஞ்சிறு குழந்தைகளின் பாதுகாப்பு என்பது உறுதிபடுத்தப்படாத ஒன்றாக இருக்கிறது. எனவே குழந்தைகளை இம்மையத்துக்கு அனுப்ப பெற்றோர்களும் அக்கறை காட்டாமல் இருக்கிறார்கள்.

புதிய கட்டிடம்

புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தும் இன்னும் அதிகாரிகளின் செவிகளுக்கு எட்டாமல் இருந்து வருகிறது. பெற்றோர்களின் தயக்கத்தையும், அச்சத்தையும் போக்கும் விதமாக புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும். பொறுத்திருந்து பார்ப்போம், இம்மக்களின் கோரிக்கை நிறைவேறுமா என்று.


Next Story