சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க கோரிக்கை


சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

ஏரல்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், கருங்குளம் மற்றும் ஏரல் தாலுகா பகுதிகளில் கடந்த 2022-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்ததின் காரணமாக கடுமையான வறட்சி ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் குறைந்து சாத்தான்குளம் தாலுகா சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயித்துக்கு மேலான பனை மரங்கள் கருகிய நிலையில் உள்ளன.

இதேபோல் சாத்தான்குளம் பகுதியில் தென்னை மரங்கள் மற்றும் ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், ஏரல் தாலுகா பகுதிகளில் உள்ள வாழைகள் அனைத்தும் நீரின்றி கருகி விவசாயிகள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சந்தித்திராத கடும் வறட்சியை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழியும் நிலை உள்ளது. எனவே ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், ஏரல் தாலுகா பகுதிகளை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் தகுந்த நிவாரணம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story