ஜவ்வாதுமலை புங்கம்பட்டுநாடு பகுதியில் வசிக்கும் 60 குடும்பங்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை
60 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கலெக்டரிடம் ஒன்றியக்குழு தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.
திருப்பத்தூர்
60 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கலெக்டரிடம் ஒன்றியக்குழு தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் விஜியா அருணாச்சலம் மற்றும் புங்கம்பட்டு ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அமர்குஷ்வாஹாவை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், புங்கம்பட்டுநாடு ஊராட்சியில் உள்ள அரசு தரிசு நிலத்தில் 60 குடும்பங்கள் கடந்த 75 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கான தீர்வைத்தொகையை ஆண்டுதோறும் புங்கம்பட்டுநாடு ஊராட்சிக்கு செலுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் ஆதார் அட்டைகளில் அவர்கள் வசிக்குமிடம் பெருமாள் கோயில் என பதிவாகியுள்ளது. மேற்படி வீடுகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கடந்த 65 ஆண்டுகளகாக அரசுக்கு மனு கொடுத்தும் இதுநாள்வரை வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை. பட்டா இல்லாத காரணத்தால் அரசின் இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை.
எனவே அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும் எனக்கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.