அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை


அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
x

அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரம் ஊராட்சியை சேர்ந்த கிழவன் கோவில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலான பொதுமக்கள் கூலித்தொழிலாளிகள். இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வாருகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதேபோல முறையான சாலை வசதி இல்லை. தெரு விளக்குகளும் சரிவர எரிவது இல்லை. இதனால் இப்பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story