அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை


அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
x

அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பில் அரசு மருத்துவமனை உள்ளது. தாலுகா தலைமை மருத்துவமனையான இங்கு ஆண்கள், பெண்கள் மற்றும் மகப்பேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. 90 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் பெண்கள் பிரிவு கட்டிடம் சேதமடைந்ததால், பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதால் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் சிரமப்படுகின்றனர். இங்கு 6 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து வாரம் ஒரு முறை பிரசவம் பார்ப்பதற்காக மகப்பேறு மருத்துவர் இங்கு வருகிறார். இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லாததால் இ்ப்பகுதி பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரை நியமித்து, தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story