பழங்குடியினர் சாதி சான்று வழங்க கோரிக்கை


பழங்குடியினர் சாதி சான்று வழங்க கோரிக்கை
x

முன்னோர் பயன்படுத்திய பொருட்களுடன் வந்து பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை விடுத்தனர்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் ஊராட்சியில் உள்ள குருமன்ஸ் இனமக்கள் எஸ்.டி. சாதி சான்று கேட்டு முன்னோர்கள் பயன்படுத்திய பழங்குடியினர் பொருட்களை தண்டராம்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் வைத்து தங்களுடைய குழந்தைகளுக்கு சாதி சான்று வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதனை பார்வையிட்ட தாசில்தார் பரிமளா இதுகுறித்து திருவண்ணாமலை கோட்டாட்சியரிடம் தெரிவிப்பதாகவும், அதைத்தொடர்ந்து சாதி சான்று வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story