முல்லைப்பெரியாற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
கம்பத்தில் முல்லைப்பெரியாற்றின் கரையோரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தேனி மாவட்டம் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிப்பட்டி வரை முல்லைப்பெரியாறு அணை மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. இங்கு தென்னை, வாழை, திராட்சை மற்றும் காய்கறிகளும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லோயர்கேம்பில் தொடங்கி வைகை அணை வரை முல்லைப்பெரியாற்றின் கரையினை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருவதால், ஆற்றின் அகலம் நாளுக்கு நாள் சுருங்கி கொண்டே செல்கின்றன. ஆனால் பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக கம்பம்- காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள முல்லைப்பெரியாற்றின் கரையோரத்தில் உள்ள மரங்களை தனிநபர்கள் வெட்டி அகற்றிவிட்டு, கரையை பொக்லைன் எந்திரத்தின் மூலம் சமன்படுத்தி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள், அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றனர். எனவே மாவட்ட